TamilsGuide

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்குக்கு ஸ்கெட்ச்? - பணிப்பெண்ணாக மாறிய சீன ராணுவ மேஜர்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா சுற்றுப்பயணத்தின் போது அவருடன் உலகப் பணக்காரர் எலான் மஸ்க் உடன் சென்றார்.

பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த விருந்தில் எலான் மஸ்க்கிற்குப் பின்னால் நின்ற ஒரு பெண் பணியாளர் தற்போது கவனம் பெற்றுள்ளார்.

அவர் சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், சீன ராணுவத்தின் ஒரு பட்டாலியன் கமாண்டரான மேஜர் செங் செங் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த மேஜர் செங் செங், சீன ராணுவ நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு கையேடுகளை எழுதுவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.

மேஜர் செங் செங்ன் ராணுவ சீருடையில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், தற்போதைய விருந்து புகைப்படங்களையும் ஒப்பிட்டு பலர் இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தங்களது வலைக்குள் வீழ்த்த சீனா உளவு உத்திகளை கையாள்வதாக கருதப்படுகிறது.

பாங் பாங் என்ற சீனப் பெண் மூலம் கலிபோர்னியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற சீனா ஹனிட்ராப் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன
 

Leave a comment

Comment