• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் டிரம்பின் புதிய அறிவிப்பு

இலங்கை

ஈரானில் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு ட்ரம்ப் கூறியதாவது, ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது. எங்கள் படையினர் முற்றுகையின் மூலம் ஹோர்முஸ் நீரிணை எங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரு வருடத்துக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்ழிவத் தாக்குதல்களைத் தொடர்ந்து நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அணுப் பொருட்களை ஈரான் வைத்திருப்பதை அமெரிக்க அனுமதிக்காது.

நாங்கள் அதைப் பெறுவோம். அதைப் பெற்ற பிறகு அதனை அநேகமாக அழித்துவிடுவோம். ஆனால், அதை அவர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

அங்கு எதுவித தடையுமின்றி போக்குவரத்து இயங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். சுங்க கட்டணங்கள் வேண்டாம். அது சர்வதேசமானது. அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply