TamilsGuide

மனதளவில் வருத்தமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு நடிகை அம்பிகா சொன்ன விஷயம்...

தமிழ் சினிமாவிலும் எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் தனது சினிமா பயணத்தை மிகவும் கரெக்ட்டாக கொண்டு சென்றவர் நடிகர் ரவி மோகன். சினிமாவில் ஜெயித்த ரவி மோகன் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார்.

கடந்த வருடம் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறேன் என அவர் கூறியதில் இருந்து அவரைப்பற்றி நிறைய சர்ச்சைகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சமீபத்தில் நடிகர் ரவி மோகன், எல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது வாழ்க்கையில் நிறைய மோசமான விஷயங்கள் நடக்கிறது, என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறார்கள் என அழுது புலம்பி பேசியிருந்தார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள்.

ரவி மோகன் பேட்டியை கண்ட நடிகை அம்பிகா, ரவி நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும், கடவுள் உன்னைச் சோதிக்கிறார், கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக் கொள்.

தவறான முடிவுகளை எடுக்காதே, உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே. கடவுளிடம் வேண்டிக்கொள், நன்றாக தூங்கு, பெற்றோருடன் இரு அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் இரு என ஆறுதல் கூறியுள்ளார் நடிகை அம்பிகா.
 

Leave a comment

Comment