TamilsGuide

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக சைக்கிளில் சென்ற போது யானை தாக்கியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவரை உடனடியாக மீனவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
 

Leave a comment

Comment