TamilsGuide

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க 

இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவது தொடர்பாக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு சம்பந்தமாக, பசில் ராஜபக்ஷ இன்று (22) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தற்போது உடல்நலக்குறைவுக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றில் முன்னிலயாக முடியாமல் போனது என தெரிவித்து, மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைக் கருத்தில் கொண்டும், பசில் ராஜபக்ஷ பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்தில் கொண்டும், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 

Leave a comment

Comment