• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

2026ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கருப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் ரிலீஸான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் முதல் நாளில் இருந்தே வேட்டையாடி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் கருப்பு திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இதன்மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை கருப்பு படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply