TamilsGuide

துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... 

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ஒரு பிரம்மாண்டமான படம் 'துரந்தர் 2'. இது இந்திய உளவு அதிரடித் (Spy Action) திரைப்படமாகும். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் பாகம் 2025 டிசம்பர் மாதமும், இரண்டாம் பாகம் 2026 மார்ச் மாதமும் வெளியானது.

சாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்த ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ இந்தியாவில் மட்டும் ரூ.1,150 கோடிக்கும் மேல் வசூலித்து, உலகளவில் ரூ.1,780 கோடியைத் தாண்டி ஆல்-டைம் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ நாளை Netflix ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை முதல் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தை Netflix ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். 

Leave a comment

Comment