• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

இலங்கை

ஹுங்கம பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து குறித்த லொறியில் பயணித்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லொறி மூலம் சட்டவிரோதமாக கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது குறித்து ஹுங்கம பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இன்று (20) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply