ஸ்ரீலீலா கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா? அவரது அம்மா கொடுத்த விளக்கம்
சினிமா
நடிகை ஸ்ரீலீலா தற்போது இந்திய அளவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீலீலா பற்றி சமீபத்தில் ஒரு கிசுகிசு பரவியது. ஸ்ரீலீலா பிரபல கிரிக்கெட் வீர்ர் திலக் வர்மா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இது பற்றி ஸ்ரீலீலாவின் அம்மா கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். "இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, உண்மை இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான தகவல் தான்."
"ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்ததாக சொல்லப்படுவது எதேச்சையாக நடந்தது. வேறு எதுவம் இல்லை. சம்மந்தமே இல்லாத விஷயத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத கதைகளை பரப்புகிறார்கள்" என அவர் கோபமாக பேசி இருக்கிறார்.
























