கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர்.
இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் இன்றையதினம் (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் , மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதனை இலங்கை தமிழரசு கட்சியின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


