• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு

இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, குடிமக்கள் தங்கள் விவரங்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இதுவரை பதிவு செய்யாதவர்கள், தங்களது முகவரி, பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணில் திருத்தங்கள் தேவைப்படுபவர்கள், மற்றும் 2009 பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் பிறந்த அனைவரும் கவனம் செலுத்துமாறு ஆணையகம் வலியுறுத்தியது.

தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு, குடிமக்கள் தங்கள் பகுதி கிராம அலுவலரைச் சந்தித்து, தேவையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ec.lk/vrd என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாக்காளர் பதிவு விவரங்களை ஒன்லைனில் சரிபார்த்துப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆணையகம் அறிவித்துள்ளது.

பதிவு செயல்முறையை நிறைவு செய்வதற்கான இறுதிகத் திகதி 2026 ஜூன் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply