• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்

இலங்கை

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு அதிசய சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் இந்த வாழை மரமே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கிடையில் உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையின் விசித்திர நிகழ்வாக கருதப்படும் இந்த சம்பவத்தை பார்ப்பதற்காக அயலவர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

சிலர் இதனை அரிய இயற்கை மாற்றமாகக் கருதுகின்ற நிலையில், இன்னும் சிலர் இதனை தெய்வ அதிசயமாகவும் பேசிக்கொள்கின்றனர்.

வாழைமரத்தின் உட்பகுதியில் சிக்கியபடி வெளிவந்துள்ள இந்த வாழைக்குலை தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் நான் இதுபோல ஒருபோதும் பார்த்ததில்லை.

வாழைமரம் நடுவில் இருந்து குலை வந்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பலரும் வந்து பார்த்து செல்கிறார்கள்.’

Leave a Reply