சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - பல கட்டிடங்கள் சேதம்..
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக என்பது குறித்து சீனா உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.























