TamilsGuide

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து

பிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) பதிலாக தொழிற்கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான எந்தவொரு தலைமைத்துவப் போட்டியிலும் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இந்தத் தலைமைத்துவப் போட்டியை உடனடியாக நடத்துவதற்குத் தான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் நவீனத்துவப் பிரிவாகக் கருதப்படும் ‘ப்ரோக்ரெஸ்’ (Progress) ஆதரவாளர் குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ‘இல்ஃபோர்ட் நோர்த்’ (Ilford North) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 

Leave a comment

Comment