TamilsGuide

கொண்டாடப்படும் கருப்பு.. குஷியில் கண்ணுகளா.. செல்லங்களா - என வீடியோ வெளியிட்ட சூர்யா

படத்திற்கு மக்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் சந்தோஷத்தில் நடிகர் சூர்யா படக்குழுவினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா நடித்த 'கருப்பு' படம் கடந்த மே 15 ஆம் தேதி வெளியானது.

முன்னதாக மே 14 ஆம் தேதியே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மே 15 திரைக்கு வந்த கருப்பு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் கருப்புக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

கடைசியாக வெளியான ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்கு கை கொடுக்காத நிலையில் கருப்பு அவருக்கான கமர்ஷியல் கம்பேக் படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் உற்சாகத்தில் நடிகர் சூர்யா, "கண்ணுகளா... செல்லங்களா...என் சாமிகளா" என பேசி படக்குழுவினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment