ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு டிப்பர் வாகனம் மீண்டும் வீதிக்கு நுழைந்த போது, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


