TamilsGuide

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - விகாராதிபதிக்காக குவிந்த சட்டத்தரணிகள் - நிர்கதியாய் நின்ற சிறுமி 

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.

சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.

மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் கைவிடப்பட்ட சிறுமி ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை.

15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வரும் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸார் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ள சிறுமியின் தாயாரான பெண்ணின் வங்கிக் கணக்கு அறிக்கைகள் ஆகியவை மாத்திரமே எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளன.

மேலும் பிரதிவாதியான அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருததுடன், தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தின தேரருக்காக மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், "எனது சேவைபெறுநர் சார்பில் தற்போது பிணைக்கோரிக்கை எதனையும் முன்வைக்கப் போவதில்லை என்றும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சைப் பெற்று வரும் எனது சேவைபெறுநருக்கு மேலும் ஒருசில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கும் நோக்குடனும் தற்போது பிணைக்கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை" என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமியின் தாயாருக்காக, மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், சந்தேகநபருக்குப் பிணை வழங்க வேண்டாம் எனப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், கோட்டை நீதிவான் பசன் அமரசேன சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பித்திருந்த உத்தரவுக்கமைய, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தேகபரான தேரரை எதிர்வரும் 22 ஆம் திகதி அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், அதுவரை சந்தேகபரான பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டிருந்தார்.

Leave a comment

Comment