• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் - சவுந்தர்யா ரஜினிகாந்த்

சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நாகர்கோவிலில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றிருப்பது வரலாற்று வெற்றி. தமிழக மக்கள், முதலமைச்சர் விஜய் நல்லது செய்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவரும், அவரது கட்சியினரும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எனது குடும்பத்தின் சார்பாக விஜய்க்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கிறீர்கள். நிறைய சவால்களும் வரப்போகிறது. நீங்கள் நிச்சயம் அதை எதிர்கொண்டு சாதிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
 

Leave a Reply