TamilsGuide

சீனா 200 விமானங்களை வாங்குவது உண்மை தான்... உறுதிப்படுத்திய போயிங்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பெய்ஜிங் பயணத்தின்போது முன்னதாக அறிவித்திருந்தபடி, 200 விமானங்களை வாங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக போயிங் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

"எங்களுடைய சீனப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், போயிங் விமானங்களுக்கான ஆர்டர்களுக்காக சீன சந்தையை மீண்டும் திறக்கும் எங்களின் முக்கிய இலக்கையும் நாங்கள் அடைந்தோம்," என்று, சீனாவுக்கான அமெரிக்க குழுவில் இடம்பெற்றிருந்த அதன் தலைமை செயல் அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க்கைக் கொண்ட அந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இதில் முதற்கட்டமாக 200 விமானங்களும், இதைத் தொடர்ந்து மேலும் அதிக எண்ணிக்கையிலான விானங்களை வழங்குவதற்கான உறுதிப்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம். சீனாவின் விமானத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதை நாங்கள் இப்போது எதிர்நோக்குகிறோம். இந்த மைல்கல்லை சாத்தியமாக்கிய அதிபர் டிரம்ப்-க்கு நன்றி," என்று போயிங் நிறுவனம் தெரிவத்து இருக்கிறது.

போயிங் நிறுவனத்திடம் இருந்து சீனா கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்டர் செய்தது. அப்போது டிரம்ப், தனது முதல் வெள்ளை மாளிகை பதவிக்காலத்தின் தொடக்கத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் ஒப்பந்தமாக, 300 ஒற்றை வழித்தட மற்றும் அகலமான விமானங்களை அது ஆர்டர் செய்தது.
 

Leave a comment

Comment