TamilsGuide

முதலமைச்சர் விஜயை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் 

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து முக்கியமான 3 கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து வேளாண், நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோரும் அவரை சந்தித்தனர்.
 

Leave a comment

Comment