TamilsGuide

ஹொண்டா வைரஸ்- பிரான்சில் முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

பிரான்சில் ஹொண்டா வைரஸ் தொற்ரு காரணமாக FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு அடைதுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு நிலைமை கவலைக்குரியது அல்ல என்று கூறினாலும்,பிரெஞ்சு மக்கள் முன்னெச்சரிக்கையாக FFP2 முகக்கவசங்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலின்படி, 3 நாட்களில் 15,000 பெட்டிகள் விற்றுள்ளன அதேசமயம் வழக்கமான வார விற்பனை 2,400 பெட்டிகள் விற்பனையாவதாக கூறப்படுகின்றது.

FFP2 முகக்கவச விலை 5 யூரோ இல் இருந்து 7 யூரோ ஆக உயர்ந்துள்ளது ஹொண்டா வைரஸ் தொடர்பு கொண்ட 26 நபர்களும் எதிர்மறை எனத் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,வாரத்தில் 3 முறை பரிசோதிக்கப்படுவார்கள்.

இந்த 26 பேரில் , 8 பேர் Sainte‑Hélène  Johannesburg விமானத்திலும், 14 பேர் Johannesburg → Amsterdam விமானத்திலும் ஹொண்டா வைரஸ் கொண்டிருந்த நெதர்லாந்து பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

Hondius கப்பலில் இருந்த 5 பேர் பாரிஸ் Bichat மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர்களில் 4 பேர் நலமாக உள்ள அதேசமயம் ஒரு பெண் கடுமையான நிலையில் மீளுருவாக்கப் பிரிவில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிகின்றன.
 

Leave a comment

Comment