நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க, ஹட்டன் கல்வி வலயத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, ஹட்டன் கல்வி வலயத்திற்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும்.
மேலும் இந்த உத்தரவு குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட விடுமுறைக் காலத்தில், வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்கக் கூடாது என்று அதிகாரிகள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.


