தெலுங்கில் வெளிவந்த ஹிட் The Second Case திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின், சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முக்கிய நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உயர்ந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த Anaganaga Oka Raju படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகினர் பேட்டிகளில் பேசும் விஷயங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என்னிடம் ஒளிவுமறைவு இல்லை என பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஒளிவுமறைவு இல்லாமல் பேச பழக்கூடியவள் நான். அதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். ஆனால், எனது இந்த போக்கை மறக்கக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமராவுக்கு பின்னால் நடிக்கக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.


