நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கருப்பு'. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் இன்று உலகமெங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்து. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு (காலை 9 மணி) அரசிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது.
ரிலீசுக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதுடன் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி படம் வெளியாகாதது குறித்த கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
எல்லாருக்கும் வணக்கம். காரில் இருந்து ‘கருப்பு’ படத்தின் அப்டேட் this is the last one. i am really sorry to all the fans. படம் பார்க்குறதுக்காக வெகுதொலைவில் இருந்து பயணித்து படம் பார்க்க காலை 9 மணிக்கு தியேட்டருக்கு போன தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எந்த ஊரில் போயிருந்தாலும் சாரி. படம் பார்க்குறதே நமக்கு வாழ்க்கையில இருக்குற பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு தான். ஆனா அந்த படத்தை பார்க்க முடியாம போனதுக்கு சாரி. நானும் இதை எதிர்பார்க்கல. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எல்லா பிரச்சனைகளும் சரியாகி மாலை 6 மணிக்கு படம் வெளியாகும் என்று. நான் நிறைய யோசித்து இருக்கிறேன். ‘கருப்பு’ படம் வெளியாகி Blockbuster ஆகும்னு. அழுகை வருது. எல்லா பிரச்சனையும் சரி செய்து கடவுள் இந்தப்படத்தை வெளியிடுவார் என்று. படம் இன்னிக்கு சாயங்காலம் வரும்... உங்க எல்லாருக்கும் பிடிக்கும் என்று நான் நம்பறேன். நான் சொல்றது தான் ‘கருப்ப வறான்... வழி மறிக்காதீங்கனு...’ நிறைய பேரு மறிக்குறாங்க... எல்லாத்தையும் தாண்டி இன்னிக்கு சாயங்காலம் படம் வரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


