TamilsGuide

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல பகுதிகளுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது.

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தறை, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகள், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் சரிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment