TamilsGuide

அடுத்த ஜனாதிபதியான நாமல் - உறுதிபட தெரிவிக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

புதிய தலைமுறையினரை வழிநடத்தவும், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் நாமல் ராஜபக்சவே தகுதியானவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்று கிராம மட்டங்களில் மட்டுமல்லாமல், சிறைச்சாலைகளில் கூட அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவைப் பற்றியே பேசப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தோற்கடிக்கப்பட்ட மகிந்த

நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களுக்காகவும் அதிகப்படியாக உழைத்த தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே என்றும், அவர் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் நாடு இன்று இருப்பதை விட மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டியிருக்கும் என்றும் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மகிந்த ராஜபக்ச ஏற்படுத்திய அதே மாற்றத்தைக் கொண்டு வரவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் நாமல் ராஜபக்சவால் மட்டுமே முடியும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment