TamilsGuide

Money Heist குறித்த புது அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸில் க்ரைம் த்ரில்லராக வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ், உலகம் முழுதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சக்கைபோடு போட்டது.

இந்த படத்தில் நடித்த ப்ரொஃபசர், பெர்லின், டோக்யோ, ராக்கேல், நைரோபி, அலிசியா உள்ளிட்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

உலகம் முழுவதும் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸில், பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான நெய்மர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து, படத்தின் மீதான பார்வை பலமடங்கு அதிகரித்து இருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, மணி ஹெய்ஸ்ட் குறித்தான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் “மணி ஹெய்ஸ்ட்டின் உலகம் தொடர்வதாக” புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் மே 15ஆம் தேதி புதிய சீசன் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment