• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு டிரெய்லர் வெளியானது

சினிமா

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார். இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா மற்றும் ஷிவதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஒரு வழக்கறிஞர் தெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதே இப்படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது. 
 

Leave a Reply