2 வாரஙகள் போதும் - ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஈரானில் உள்ள "ஒவ்வொரு இலக்கையும்" தாக்குவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும் என்றும், அந்த இஸ்லாமியக் குடியரசு ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
"அவர்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். ஒருவேளை, அவர்கள் மனதளவில் அதை அறியாமல் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்காக அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல," என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிபர்டிரம்ப் அமெரிக்க ராணுவத்தால் "இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சென்று ஒவ்வொரு இலக்கையும் தாக்க முடியும். நாங்கள் விரும்பிய சில இலக்குகள் உள்ளன, அவற்றில் சுமார் 70 சதவீதத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். ஆனால், எங்களால் தாக்கக்கூடிய பிற இலக்குகளும் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.





















