• Welcome to TamilsGuide
செய்திகள் 1

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - லெஜண்ட் சரவணன்

சினிமா

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், "விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சி தான் காரணம்.

இந்த எழுச்சியை பார்த்து இந்தியாவே மிரண்டு உள்ளது. மக்கள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளார்கள். இதனை அவருடன் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சி எதிரொலித்துள்ளது. தவெகவின் வெற்றி இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது," என்று தெரிவித்தார்.
 

Leave a Reply