TamilsGuide

விஜய் வெற்றி - மம்மூட்டி, மோகன்லால் வாழ்த்து ... 

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று, வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள், 108 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், வரலாறு காணாத தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவாகியுள்ளது.

இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் மோகன்லால், பொதுமக்கள் உங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே, மிகப்பெரிய கெளரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையோடு, மக்கள் சேவைக்கான தங்களின் புதிய பயணம் உத்வேகத்துடன் தொடங்கட்டும் என்றும் நடிகர் மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ள நடிகர் மம்மூட்டி, மாநிலத்தை வழிநடத்தும் மனவலிமை த.வெ.க தலைவர் விஜய்க்கு கிடைக்க தான் வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment