TamilsGuide

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்திருப்பது அரசியல் வரலாற்றில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று தேர்தல்களாகத் தனது அசைக்க முடியாத கோட்டையாகக் கருதி வந்த கொளத்தூரில் அவர் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

ஆளும் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஒருவரே தனது சொந்தத் தொகுதியில் தோற்றிருப்பது திமுக விற்கு ஏற்பட்ட பெரும் அவமானமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி. எஸ்.பாபு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.

மேலும், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு மெயில் மூலம் அனுப்பினார். 

Leave a comment

Comment