TamilsGuide

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாகாண அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ‘Clean North’ திட்டத்தினூடாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் முகமாக வீதியோர நடைபாதை அமைக்கும் வேலைத்திட்டம் 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த வேலைத் திட்டத்தை, வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் பிரகாஸ், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
 

Leave a comment

Comment