TamilsGuide

இங்கிலாந்தின் முக்கிய நகரொன்றில் வெடிவிபத்து - 2 பேர் பலி

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஸ்டெர்ன்கோர்ட் வீதியிலுள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (03) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சாமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிவிபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

மேலும், பாதுகாப்பு காரணங்களால் சம்பவம் இடம்பெற்ற பகுதி முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அப்பகுதியை அணுக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment