TamilsGuide

UAE வெளியேற்றம்- ஓபெக் பிளஸ் முக்கியமாக தீர்மானம்

ஓபெக் பிளஸ் (OPEC+) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தியோகபூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் ஏனைய ஏழு உறுப்பினர்கள் இன்று எண்ணெய் உற்பத்தி குறித்து முக்கியமாக தீர்மானம் எடுக்க உள்ளனர். 

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வெள்ளிக்கிழமை ஓபெக் மற்றும் ஓபெக் பிளஸ் அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது.

எண்ணெய் உற்பத்தி அளவுகளில் அந்த அமைப்பு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்ததன் காரணமாகவே, கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி  அமீரகம் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமீரகம் வெளியேறிய பின்னர் நடைபெறும் இந்த முதல் சந்திப்பில், ஏனைய ஏழு நாடுகளும் தங்களது நாளாந்த எண்ணெய் உற்பத்தியை 188,000 பீப்பாய்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment