TamilsGuide

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா நாட்டில் ரொரண்டோ மாநகரில் நடைபெறவுள்ளது.

மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றபோது ஏற்பாட்டாளர்களால் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இம்மாநாடானது. உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ் செய்யறிவு மெய்ப் பொருளியல்,  பண்பாடு, புலம்பெயர் வாழ்வு,  உலகமயமாதல், வரலாறு,  பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமைகிறது.

மேலும்,  தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

மாநாட்டின் ஆய்வு வகைப்பாடுகளாக தமிழும் செய்யறிவும்,  மெய்ப்பொருளியலும் பண்பாடும்இ பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும் தமிழர் வரலாறும் வாழ்வியலும்,  வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுச் சுருக்கம் 250-300 சொற்களில் அமைதல் வேண்டும் என்பதுடன் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம் எனவும்
தமிழ் மொழியாயின் ஒருங்குறி (Unicode) 12 pt அளவிலும் ஆங்கில மொழியாயின்:  Times New Roman 12 pt அளவிலும் அமைய வேண்டும்.
குறிச்சொற்கள் தரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு சுருக்கம் அளிப்பதற்கான கடைசி நாள் எதிர்வரும் மே25 ஆகும். அதனை அளிப்பதற்கான இணையதளம் www.Global Tamil Conference org ஆகும்.

அளிக்கப்படும் அனைத்து ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு வேண்டப்படுவர்.

அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு ஜுன் 30 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும்.

முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகாமலும் ஒருங்குறி எழுத்துரு 12 அளவிலும் அமைதல் வேண்டும். இக்கட்டுரைகளை 2026.08.31 ஆம் நாளுக்கு முன் கிடைக்கக் கூடியதாக மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும்.

தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கஊடாளில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை  www.GlobalTamilConference.org  என்னும் இணைய தளத்தை பார்வையிடவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment