அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதற்கென தனி நடைமுறையை அமல்படுத்த யோசித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீரான போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான சமூக பேச்சுவார்த்தை நடைபெற்று உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுமூகமாக சென்று வர ஈரான் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு கட்டணம் செலுத்த கப்பல் நிறுவனங்கள் முன்வந்தால், அந்த நிறுவனங்களை தடையை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உடனான போரால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. பின்னர், சில கப்பல்கள் பாதுகாப்பான வகையில் செல்ல கட்டணம் வசூலித்தது. இந்த நிலையில்தான் கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


