TamilsGuide

போரில் வெடிக்காத குண்டுகளை அகற்றும்போதும் குண்டுவெடிப்பு - ஈரான் ராணுவ வீரர்கள் 14 பேர் பலி

ஈரானில் போரின் போது வெடிக்காமல் எஞ்சியிருந்த குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஜான்ஜன் நகருக்கு அருகில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளால் வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெடிக்காத பிற வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடித்ததில் 14 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுடன் போர் தொடங்கியது.

இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

தாக்குதல்கள் முடிந்தாலும், வெடிக்காமல் நிலத்தில் புதைந்துள்ள குண்டுகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஐஆர்ஜிசி அமைப்பு சந்தித்த மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.

இதுவரை சுமார் 15,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Comment