TamilsGuide

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் 7 பேர் பலி

கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் தெற்கு லெபனானில் Kfar Dajal என்ற கிராமத்தில் கார் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

Lwaizeh கிராமத்தில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

ஷோகின் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு சுமார் 50 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே Bayed என்ற கடலோர கிராமமாத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் கூடியிருந்த இஸ்ரேலிய வீரர்கள் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்பொல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment

Comment