TamilsGuide

நல்ல கதைக்காக எதையும் செய்யலாம்- எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர், எம்.எஸ்.பாஸ்கர். 'பார்க்கிங்' என்ற படத்தில் வில்லத்தனத்திலும் மிரட்டினார். அந்த படத்துக்காக தேசிய விருதும் பெற்றார்.

சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், சமீபத்தில் திரைக்கு வந்த தனுசின் ‘கர’ படத்தில் முதியவர் வேடத்தில் நடித்திருக்கிறார். 'இவரா...' என யூகிக்க முடியாத அவரது தோற்றம் அனைவரையுமே கவனிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து எம்.எஸ்.பாஸ்கர் கூறும்போது, ''என்னை பொறுத்தவரை டைரக்டர் சொல்வதை செய்கிறேன். நல்ல கதைக்காக எதையும் செய்யலாம். அப்படித்தான் அந்த வயதான முதியவர் தோற்றத்தில் நடித்தேன். என் குரலையும் மாற்றிக் கொண்டேன்.

நான் யார்? என்று ரசிகர்கள் அடையாளம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தை ரசித்தாலே போதும். அதிலேயே நான் நிறைவு கொள்வேன். அப்படித்தான் சினிமாவில் பயணிக்கிறேன்'', என்றார்.
 

Leave a comment

Comment