TamilsGuide

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்று சிவனாலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக நிகழ்வுகள் இன்று (01) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சைவ சமய வழிபாடுகள்,  முன்னோர்களுக்கான பிதிர் தர்ப்பணம் மற்றும் ஆன்மீக சடங்குகள் இடம்பெற்றதுடன்,  சித்திர குப்த நாயனார் கதை படிக்கப்பட்டு ,  சித்திரைகஞ்சியும் வழங்கப்பட்டது. இதில் பல பக்தர்கள் பயபக்தியுடன் கலந்துகொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும்,  முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறும் வகையில் நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஒழுங்காகவும் சிறப்பாகவும் மிகவும் அமைதியான முறையில் நிறைவு பெற்றது.
 

Leave a comment

Comment