• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

சினிமா

நடிகர் அஜித்குமாரின் கார்ப்பந்தயப் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படத்திற்கு 'கிளாடியேட்டர்ஸ்' (Gladiators) என்று பெயரிடப்பட்டுள்ளது. அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அதில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் 55வது பிறந்தநாளை ஒட்டி இன்று இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் தியேட்டர்களில் அல்லாமல் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

Leave a Reply