கனடிய பிரஜை வவுனியாவில் திடீர் மரணம்
கனடா
கனடா - டொரோண்டோவிலிருந்து வவுனியாவிற்கு சென்று உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது .வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதுவரை மரணத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை.இதே வேளை கனடாவிலிருந்து மகன் ஸ்ரீலங்கா விரைக்கிறார்.






















