• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகாசி விஜய்க்கு எழுதிய கதை அல்ல, ஆனா கதை கேட்காம ஓகே சொன்னாரு - பேரரசு சொன்ன மெயின் சீக்ரெட்

சினிமா

விஜய் அசின், பிரகாஷ் ராஜ், கீதா, ராஜேஷ், சரண்யா பொன்வண்ணன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்,

முதல் படம் ஹிட் கொடுத்த இயக்குனருக்கு 2-வது படத்தை கதை கேட்காமலே ஒப்புக்கொண்டு விஜய் நடித்துள்ளார். முதல் படத்தை விடவுமு், 2-வது படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அந்த படம் சிவகாசி. படத்தை இயக்கியவர் இயக்குனர் பேரரசு.

கடந்த 2005-ம் ஆண்டு விஜய் – த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் திருப்பாச்சி. இயக்குனர் பேரரசு இயக்கிய முதல் படம் இதுதான். விஜயுடன், பெஞ்சமின் நண்பராக நடித்திருந்த இந்த படத்தில் பசுபதி, லிவிங்ஸ்டன், கோட்டா ஸ்ரீனிவாசராவ், யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் அந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் பேரரசு கூட்டணியில் மீண்டும் 2005-ம் ஆண்டு வெளியான படம் சிவகாசி. திருப்பாச்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி வெளியான நிலையில், சிவகாசி திரைப்படம் நவம்பர் 1-ந்தேதி வெளியானது இரு படங்களுமே தங்கை செண்டிமெண்டை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட ஆக்ஷன் திரைப்படமாகும்.

விஜய் அசின், பிரகாஷ் ராஜ், கீதா, ராஜேஷ், சரண்யா பொன்வண்ணன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், இந்த படத்தின் கதையை எழுதியது குறித்து பேசிய இயக்குனர் பேரரசு, இந்த கதையை விஜய் நினைத்து எழுதவில்லை. காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் நிறைந்த இந்த கதையை ஒரு கமர்ஷியல் ஹீரோ பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் விஜய் பண்ண சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் ஏ.எம்.ரத்னம் சாரிடம் கதை சொன்னேன். விஜய் சார் அங்கேதான் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதனால் உடனே படம் க்ளிக் ஆகிவிட்டது. ஆனால் விஜய் சார் இந்த படத்திற்கான கதையை என்னிடம் கேட்கவே இல்லை. முதல் படமான திருப்பாச்சி வெற்றியை நம்பிய அவர், இந்த படத்தையும் சரியாக செய்துவிடுவார் என்று நம்பி என்னிடம் கதையே கேட்கவில்லை. நான் சொன்ன ஒன்லைனை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. டெவலப் பண்ண சொன்னார். டெவலப் செய்து மீண்டும் சென்னேன். ரொம்ப பிடித்திருந்தது. முதல் படத்தை விடவும் 2-வது படம் பெரிய வெற்றியை பெற்றது என்று கூறியுள்ளார்.

தேன் மொழி.
பி.கு:-இந்த படம் அம்மா, தங்கை பாசத்தை ஆழமாக பிரதிபலிக்கும் ஒரு படம். 15 வருடங்களாக சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்கும் குடும்பத்துடன், தன் காதலி குடும்பம் பற்றி வலியுறுத்த சொந்த ஊருக்கு வரும் ஹீரோ, அங்கு தன் சொந்த அண்ணனால், தன் தாயும், தங்கையும் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருவதை தெரிந்து, அண்ணணுக்கு எதிராக செயல் பட்டு, தன் குடும்பத்தை நிலை நிறுத்தும் படம். வழக்கம் போலவே விஜய் கலக்கி இருப்பார். வில்லத்தனம் செய்யும் அண்ணனாக , இப்போது அவருக்கு வில்லத்தனமாக இருக்கும் அதே பிரகாஷ் ராஜ் தான்.
ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியேய்! விஜயின் இந்த டயலாக், வருங்காலத்தில் பிரகாஷ் ராஜ் இதன் அர்த்தத்தை உணரக் கூடும்.

- குந்தவி

Leave a Reply