• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை - புதிய முன்மொழிவு

இலங்கை

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு, சுகாதார அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது, புகையிலை மற்றும் மதுவினால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான படியைக் குறிக்கிறது.

இதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய ஆவணம் புகையிலை மற்றும் மதுபானத்திற்கான தேசிய ஆணையகத்தினால் (NATA) சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புகையிலையும் மதுவும் பெரும் தடைகளாக நீடிக்கின்றன என்று இதன்போது வலியுறுத்திய அமைச்சர் ஜெயதிஸ்ஸ இந்த திட்டத்தை வரவேற்றார். 

சட்டத் திருத்தங்களுக்கான விரிவான விதிகளை வழங்குமாறும் அவர் NATA-விற்கு அறிவுறுத்தினார்.
 

Leave a Reply