• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி பட அவுட்டோரில் நாகேஷுக்கு பண கஷ்டம் - அப்பவே இவ்ளோ தொகை கொடுத்தாரா எம்.ஜி.ஆர்?

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் எம்.ஜி.ஆர். அரசியலிலும் தனக்காக இடத்தை இன்னும் வெற்றிடமாகவே விட்டுச்சென்றுள்ளார்.

அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்கள் எம்.ஜி.ஆர் என்று சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அந்த வகையில் வெளியூருக்கு சென்ற நாகேஷ் கஷ்டப்படுவதை பார்த்து, அவர் வேறொரு படப்பிடிப்பில் இருந்தாலும், அவருக்காக உதவி செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் எம்.ஜி.ஆர். அரசியலிலும் தனக்காக இடத்தை இன்னும் வெற்றிடமாகவே விட்டுச்சென்றுள்ள அவர், உதவி செய்வதில், முன்னணியில் இருப்பார். அந்த வகையில், அவரின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான நாகேஷ்க்கு உதவி செய்துள்ளார். அப்போது அவர் சிவாஜி கணேசனின் சித்ரா பௌர்ணமி படத்தில் நடித்துக்கொண்டு இருந்துள்ளார். 

1972-ம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ராமன் தேடிய சீதை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது சிவாஜி கணேசன் நடித்திருந்த சித்ரா பௌர்ணமி படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது. இரு படங்களுக்கும் ஜெயலலிதா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். 

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் வெளியூரில் நடக்கும்போது நாகேஷ் சித்ரா பௌர்ணமி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கு சாதாரண வசதிகள் இல்லாத ஒரு ஹோட்டலில் ரூம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் மிகவும் கஷ்டப்பட்ட நாகேஷ், செலவுக்கு வைத்திருந்த பணம் அனைத்தையும் செலவு செய்து ஒன்றும் இல்லாமல் இருந்துள்ளார். இந்த விஷயம், ஜெயலலிதா மூலமாக எம்.ஜி.ஆருக்கு தெரியவந்துள்ளது.

இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் உடனாடியாக தனது சொந்த செலவில், ரூம் போட்டு கொடுத்து அவரின் செலவுக்காக அப்போதே ரூ30000 பணம் செலவுக்காக கொடுத்துள்ளார். மற்றொரு படத்திற்காக வந்த நடிகர் தானே என்று பார்க்காமல், ஒரு சக கலைஞர் வெளியூரில் வந்து கஷ்டப்படுவதை பார்த்த எம்.ஜி.ஆர், தேடிப்போய் அவருக்கு உதவி செய்துள்ளார். இதுதான் அவரின் குணம்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply