தினமும் காலை 4 மணிக்கெல்லாம் கண் விழித்து விடுவேன்..
சினிமா
தினமும் காலை 4 மணிக்கெல்லாம் கண் விழித்து விடுவேன். அதன்பிறகு பூசை செய்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு சில சுலோகங்களை எழுதி முடிப்பதற்குள் 10 மணி ஆகிவிடும். அதன்பிறகுதான் பசியாறுவேன். வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் நானேதான் சமைத்துச் சாப்பிடுவேன்,”
திரையுலகில் தீவிரமாகப் பணியாற்றியபோதும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் சென்னை கடற்கரையில் நடைப்பயிற்சி , அங்கேயே உடற்பயிற்சி, யோகா செய்துவிட்டுதான் வீடு திரும்புவேன்
வயதாகிவிட்டாலும் நான் உணவுக் கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றுவதில்லை. சிறுவயது முதல் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்ததுதான் தம்மை இப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
நான் கடைசியாக நடித்த படம் ‘காதல் சடுகுடு’. விக்ரம் நடித்த இப்படம் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் வெளியீடு கண்டது. அத்தோடு நிறைவடைந்த 50 ஆண்டுகால சினிமா வாழ்வு போதுமென்று ஒதுங்கி சென்னையில் வாழ்ந்து வருகிறேன்
தனது சமகால நடிகைகளான சரோஜாதேவி, லதா, ஷீலா உள்ளிட்டோருடன் இன்றளவும் தொடர்பில் உள்ளனர்.
சரோஜாதேவி சென்னை வந்தால் என் வீட்டுக்கு வருவார்.இருவரும் மணிக்கணக்கில் பேசுவோம்
நடிகை விஜயகுமாரி 🥀























