7 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடம் இசையமைப்பாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தமிழ் திரையுலகை சேர்ந்த பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்தபோது புகார் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளரின் ஸ்டுடியோவிலேயே கடவுளின் பெயரை சொல்லி இசையமைப்பாளர் தன்னிடம் அத்துமீறியதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.
பாலியல் அத்துமீறலுக்கு பின்னரே சென்னையை விட்டு ரிஷிகேஷ் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் இசையமைப்பாளரின் பெயரை வெளியிட போவதாகவும், தன்னைப்போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாடகி தெரிவித்தார்.
பாடகி குற்றம்சாட்டி உள்ள இசையமைப்பாளர் 2010 காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக நுழைந்தவர் என்றும், ஆரம்ப காலகட்டத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட விருதுகளை வென்றவர் என்றும் தெரிவித்தார்.
தற்போது வெளியாகும் பல ஹிட் பாடல்களை இசையமைத்துள்ளார். மேலும் தமிழ், மலையாளம் மொழிகளில் சினிமா பாடல்களை இசையமைத்து வருகிறார் என்றும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இளம் இசையமைப்பாளருக்கு பல பாடல்களை ஸ்வாகதா பாடி உள்ளார். சிசிடிவி பொருத்தப்பட்ட அறையில் இசையமைப்பாளர் அத்துமீறியதாக குற்றம்சாட்டிய அவர், சிசிடிவி காட்சிகளை வைத்து இசையமைப்பாளர் தன்னை மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.


