TamilsGuide

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று

உலக அமைதிக்காக முன்னெடுக்கப்படும் “எஹி பஸ்ஸிகோ” அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

களனி ராஜ மகா விகாரையில் இருந்து நண்பகல் 12 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்தப் பயணம், கொழும்பு, சுதந்திர சுதந்திரச் சதுக்கத்தை நோக்கிச் செல்லும்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், மாலை 4:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஒரு சிறப்பு அரச விழா நடைபெற உள்ளது.

அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்று, ஜனாதிபதியினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்படவுள்ளது.

அதன்பின்னர், கௌரவத்திற்குரிய தேரர்கள் ஊர்வலமாக கங்காராம விகாரைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதுடன், அங்கு தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் நடத்தப்படும் ‘We are the Design’ எனும் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், Clean Sri Lanka செயலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்கத் தகவல் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் முப்படைகள், தேசிய வடிவமைப்பு நிலையம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முழுமையான அனுசரணையுடன் இந்த அமைதிக்கான நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22 ஆம் திகதி காலை தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து  ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை மற்றும் மகர வழியாக பயணித்து நேற்று (27) களனியை வந்தடைந்தது.

இது இலங்கையில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியாகத் தொடங்கப்பட்டிருந்தாலும், இப்போது அது வெறும் காட்சிக்கான பயணம் மட்டுமல்ல. 

தற்போது இது அமைதியாகவும், படிப்படியாகவும், பாதையெங்கும் உள்ள உயிர்கள், வீடுகள் மற்றும் மக்களின் மனங்களுக்குள் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கிறது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரையான இந்தப் பயணம், கடந்து வந்த தூரத்தை விடவும், இடம்பெற்ற சந்திப்புகளைப் பற்றி அதிகமாகக் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், கொழும்பின் பல பகுதிகளில் இன்று ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment