TamilsGuide

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு, வனாத்தவில்லுவ – லெக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள எரி உலையில் வைத்து நேற்று அழிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், சிலாபம் மற்றும் பலபிட்டிய நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பே இவ்வாறு அழிக்கப்பட்டது.

இதன்படி, 22 கிலோ 888 கிராம் ஹெரோயின், 33 கிலோ 172 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 247 கிலோ 940 கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருள் அளவுகள் இதன்போது தீயிட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment